நடிகை ப்ரணீதாவுக்கு குழந்தை பிறந்தது…மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் பொற்கி என்ற கன்னட சினிமாவில் நடித்து திரை உலகில் நுழைந்தார்.அதன்பின்னர் இரண்டாவது படமான எம் பில்லோ எம் பில்லடோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தனது முதல் இரண்டு படங்களிலேயே இரண்டு மொழி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிய ஒரே நடிகை இவர் தான்.பின்னர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய உதயன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி

நடிகை ப்ரணீதாவுக்கு குழந்தை பிறந்தது...மகிழ்ச்சியில் குடும்பத்தினர் 1

விளம்பரம்

அதன்பின்னர் தமிழில் சரிவர படங்கள் அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ப்ரணீதா.இந்நிலையில் தனது கணவர் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார்.இதனால் இவர் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.கடந்த மாதம் இவருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது,

கட்டாயம் படிக்கவும்  உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா சினேகா.. வசீகரா பட சினேகாவாக மீண்டும் மாறி அசத்தல்

நடிகை ப்ரணீதாவுக்கு குழந்தை பிறந்தது...மகிழ்ச்சியில் குடும்பத்தினர் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது ப்ரணீதா அம்மா ஆகியுள்ளார்,அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.தனது மகளுடன் எடுத்த முதல் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவர் பதிவிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.நடிகை ப்ரணீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளது.இந்த புகைப்படத்தினை பதிவிட்டு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதையும் ,பிரசவம் பார்த்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரணீதா பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை தர்ஷா குப்தா

நடிகை ப்ரணீதாவுக்கு குழந்தை பிறந்தது...மகிழ்ச்சியில் குடும்பத்தினர் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment