தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.பேரன்கள் பட்டு வேஷ்டி சட்டையில் சூப்பர் ஸ்டார் போல கெத்தாக உள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மேலும் வேஷ்டி சட்டையில் பேரன்கள் தாத்தாவை போலவே உள்ளார்கள் என ஆச்சரியமாக பார்த்து கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.