The Indian Times

மனைவி கிகி உடன் வெளிநாட்டில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் விடுமுறை கொண்டாட்டம்

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.

அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Advertisement

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாகவே சரியான கதைகள் இவர்க்கு அமையாததால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்தார்.இப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.

இருப்பினும் சாந்தனு விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு வெற்றிக்காக ஓடிவருகிறார்.அண்மையில் இவருக்கு வெளியான ப்ளூஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in