மறக்க முடியா சர்ச்சையை கிளப்பிய நெஞ்சம் மறப்பதில்லை!! மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!!!

தமிழ் சினிமாவின் ஜீனியஸ் டைரக்டர் என்றழைக்கப்படும் இயக்குனர் செல்வராகவன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பார்க்கும் நமக்கு ஒரு வித்தியாசமான உள்ளுணர்வை கொடுக்கும். துள்ளுவதோ இளமை முதல் தற்போது வெளியாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வரை டைரக்டர் டச் என்று கூறப்படும் இவரது சிறப்பம்சம் நிச்சயம் இருக்கும். அந்தவகையில் சென்ற வாரம் இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடித்து வெளியான படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

மறக்க முடியா சர்ச்சையை கிளப்பிய நெஞ்சம் மறப்பதில்லை!! மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!!! 1

விளம்பரம்

எஸ்.ஜே.சூர்யா சைக்கோ கொலைகாரனாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பல ஆண்டுகளாக வெளிவராமல் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தது. அதிக எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்ற ராம்சே என பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதோடுமட்டுமல்லாமல் படத்தில் இந்த கதாபாத்திரம் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

மறக்க முடியா சர்ச்சையை கிளப்பிய நெஞ்சம் மறப்பதில்லை!! மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!!! 2

விளம்பரம்

இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக செல்வராகவன் யூ டியூப் சேனலின் நேர்காணலில் பங்கேற்றுரிருந்தார். அந்த நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் ராமசாமி என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் வைத்து ஒரு தனி நபரை தானே குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , ஆமாம் ஒரு தனி நபரை தான் குறிக்கிறது என்று செல்வராகவன் ஒப்புக்கொண்டார். இது பெரியாரின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சர்ச்சையின் காரணமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மாறுவேட மன்னன் பாக்கியலட்சுமி கோபியின் GETUP புகைப்படங்கள் இதோ

மறக்க முடியா சர்ச்சையை கிளப்பிய நெஞ்சம் மறப்பதில்லை!! மன்னிப்பு கேட்ட செல்வராகவன்!!! 3

விளம்பரம்

அவர் கூறியதாவது ,அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிந்தது, கவனமாக இருக்க தவறிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். இருப்பினும் ஒரு சிலர், முன்னணி இயக்குனரான இவருக்கு ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியது புரியவில்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்று இவரது பதிவிற்கு எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment