The Indian Times

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ரவீந்தரின் கியூட்டான புகைப்படங்கள்

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.

இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

தற்போது நடிகை மகாலட்சுமி பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருவரும் குறித்து அதிக விமர்சனங்கள் இணையத்தில் எழுப்பப்பட்டது,இவர்களை பற்றித்தான் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது,அந்தளவிற்கு இவர்களது திருமணம் பிரபலம் ஆகியது.

லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கடைசி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.விரைவில் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மஹாலக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in