பாடகர் மனோவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,அந்தளவிற்கு இவருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கனெக்சன் உள்ளது.இவர் தற்போது ரிச்மன்ட் கேபிரியல் பல்கலைக்கழகம் பட்டத்தினை கொடுத்து பெருமை படுத்தியுள்ளது.அதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துள்ளார்.இவரின் பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் பாடகர் மட்டுமில்லைசிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் கூட,ரஜினிகாந்தின் பல தெலுங்கு படங்களுக்கு இவர் டப்பிங் கொடுத்துள்ளார்.
இவர் பாடிய பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை மனோ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகிய சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்துள்ளார்.சிங்காரவேலன் படத்திற்கு பிறகு மனோ திரைப்படங்கள் பக்கம் வரவில்லை அதற்கு காரணம் இளையராஜா தான் என இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இவர் சிங்காரவேலன் படத்தில் நடிக்கும் பொழுது இவர் பாடவேண்டிய பல பாடல்களை படப்பிடிப்புக்கு பிறகுதான் பாடிக்கொடுத்தாரம்,இதனால் இளையராஜா மனோவிடம் நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என கூறவே,உடனே சுதாரித்துக்கொண்டு திரைப்படங்களை ஓரம் கட்டி இளையராஜாவின் பேச்சை கேட்டு பாடலில் மட்டும் கவனம் செலுத்தி இன்று இந்த நிலைமைக்கு வருகை தந்துள்ளார் மனோ என பெருமிதமாக கூறியுள்ளார்.
https://twitter.com/ManoSinger_Offl/status/1647482019222556673
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in