The Indian Times

சித்தா படத்தில் இருந்து வெளியாகிய “உனக்கு தான்” பாடல் இதோ

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சித்தார்த் எப்பொழுதும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார்.மேலும் இவர் அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.இவரை பலர் பாராட்டினாலும்,சிலர் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.அந்தளவுக்கு ட்வீட்டர் மூலம் மிக பிரபலம் ஆகியவர் சித்தார்த்.இவர் அண்மையில் நடிகை அதிதி ராவை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது. மேலும் இவர்களது ரசிகர்கள் எப்பொழுது இவர்கள் திருமணம் நடைபெறும் என ஆவலாக பார்த்து வருகின்றனர்.

Advertisement

தற்போது சித்தார்த் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு திபு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள உனக்குத்தான் என்ற பாடலை வெளியிட்டுள்ளது,இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரேவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in