தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் சாதாரண கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று இவரது படங்கள் 100கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
பல ஆண்டுகளாக நடித்து வரும் எவராலும் இத்தகைய வசூலை குறுகிய காலகட்டத்தில் பெற முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து 10 வருடங்களில் அதனை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.காரணம் டாக்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது என்பதால்.அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது.இதனால் அதிக கவனத்துடன் இவரது அடுத்தப்படமான மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் மூலம் இவர் மீண்டும் முன்னணியில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. புகைப்படங்களை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.