“பிக் பாஸ் தாமரையா இது?” ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐக்கியுடன் க்யூட்டாக ஆடிய தாமரை! Thamarai Dances With Iykki

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை கொண்ட போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி இம்மி அளவும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்
ஸ்டெடர்ஜி தாண்டி வேற எங்கயோ போறிங்க ஆரி - கமல்

"பிக் பாஸ் தாமரையா இது?" ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐக்கியுடன் க்யூட்டாக ஆடிய தாமரை! Thamarai Dances With Iykki 1

விளம்பரம்

எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசி பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக கலக்கி வந்த தாமரைக்கு வீட்டில் ஆதரவு கரங்கள் அதிகம் நீண்டன. விளையாட்டை பற்றி தெரியாவிட்டாலும் அதை பற்றி தெரிந்து கொண்டு அதை சிறப்பாக விளையாடி ஜெயிப்பார். மேலும், மற்றவர்களை போல ஒய்வு எடுத்துக்கொண்டே இருக்காமல் வீட்டில் உள்ள அணைத்து வேலைகளையும் சேர்த்து பார்த்து செய்ததும் நாம் பார்த்திருப்போம்! இறுதிவரை தாமரை இருப்பார் என மக்கள் தீர்க்கமாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிரூப் காப்பாற்றப்பட்டு தாமரை புறக்கணிக்கப்பட்டார். மேலும், தாமரையை வெளியே அனுப்பியது சரியே இல்லை என்றும் மக்கள் பலரும் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
கையை உடைத்த ஹவுஸ் மேட்ஸ்..வலியால் துடித்த அனிதா..வினையாகும் விளையாட்டு | Bigg Boss Ultimate Promo 3

"பிக் பாஸ் தாமரையா இது?" ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐக்கியுடன் க்யூட்டாக ஆடிய தாமரை! Thamarai Dances With Iykki 2

விளம்பரம்

ஆனாலும், மக்கள் தீர்ப்பை மனதார ஏற்றுக்கொண்டு முழுமனதுடன் வீட்டை விட்டு வெளியேறியது நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது என்னவோ உண்மையே! இப்பொழுது ஐக்கி பெரியுடன் LIVE வீடியோவில் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலானது! இப்பொழுது முதல் முறையாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவரே பேசி வெளியிட்டது வைரலானது. இப்பொழுது பிக் பாஸ் முந்தைய சீசன் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார். இப்பொழுது ஐக்கி பெரியுடன் ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு ஆடியுள்ளார். அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

1 thought on ““பிக் பாஸ் தாமரையா இது?” ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஐக்கியுடன் க்யூட்டாக ஆடிய தாமரை! Thamarai Dances With Iykki”

  1. Thamarai should behave better with Bala. She’s spoiling his name without his knowledge. I think no one can control vanitha. So arrogant. She is a bad example for women. Why big boss is so fond of her? Does he think he can’t run bb ultimate show without her. Otherwise all are good. Please send vanitha out.

    Reply

Leave a Comment