The Indian Times

தாமிரபரணி பட நாயகி பானு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

டிவி தொடரின் மூலம் அறிமுகமாகி சினிமாவிற்குள் நுழைந்தவர் பானு.முதன் முதலாக அச்சனுராங்கதா வீடு என்ற மலையாள படத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

இறுதியாக தமிழ் சினிமா பக்கம் வந்த இவருக்கு தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதை சரியாக பயன்படுத்திய இவருக்கு இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கிடைத்தது.இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் சரியாக அமையவில்லை.

அதனால் மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்ற அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்தது.

மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்தாலும் அவ்வப்பொழுது தமிழ் படத்திலும் நடித்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தற்போது பானு வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.இவர் தனது மகள் பிறந்தநாளை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in