வாரிசை வசூலில் துவம்சம் செய்த துணிவு… தொடர்ந்து முதலிடத்தில் துணிவு

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது.இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி முரட்டுத்தனமாக மிரட்டும் அகிலன் படத்தின் 1ST SINGLE வெளியாகியது

வாரிசை வசூலில் துவம்சம் செய்த துணிவு... தொடர்ந்து முதலிடத்தில் துணிவு 1

விளம்பரம்

நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் தமிழகம் மற்றும் உலகமெங்கும் துணிவு படம் திரையரங்குகளில் காட்சிகள் வெளியாகி உள்ளது.அதேபோல் தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு படமும் இன்று அதிகாலை 4 மணி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தினை கண்டு களித்து வருகின்றனர். பல காட்சிகள் இரண்டு படங்களுக்கும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிவருகிறது.மேலும் டிக்கெட்டுகளும் ஒருவாரத்திற்கு முன்பதிவு ஆகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்... மகனை கொஞ்சி பாடும் SUPER SINGER அஜய் கிருஷ்ணா

வாரிசை வசூலில் துவம்சம் செய்த துணிவு... தொடர்ந்து முதலிடத்தில் துணிவு 2

விளம்பரம்

தற்போது இரண்டு படங்களும் வசூலில் வெளுத்துக்கட்டி வருகிறது.அதன்படி முதல் நாள் வசூலில் தமிழகத்தில் துணிவு படம் வரிசை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருந்தது.இந்நிலையில் இரண்டாவது நாளும் தமிழகத்தில் மட்டும் ரூ. 33 கோடி வசூல் செய்துள்ளது. துணிவு திரைப்படம் ரூ. 37 கோடி வரை வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்..இதுகுறித்து தற்போதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் படக்குழுவே அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment