சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது என்றால் அதுவும் சென்னையில் விளையாடுகிறது என்றால் ரசிகர்களை கையிலேயே புடிக்க முடியாது.
கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரியும்,பல திரைபிரபலங்கள் வருகை தருவது என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை.
தற்போது நடத்தி வரும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.இந்நிலையில் இன்று சென்னை மற்றும் மும்பைக்கும் இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை காண அமைச்சர் உதயநிதி தனது தொகுதி குழந்தைகளுடன் வருகை தந்துள்ள்ளார்.
அதேபோல நடிகர் தனுஷ்,நயன்தாரா,அனிருத்,விக்னேஷ் சிவன்,வரலக்ஷ்மி சரத்குமார்,லோகேஷ் கனகராஜ் மற்றும் அஸ்வின் என பலரும் வருகை தந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது
இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா தமிழ் பிரபலங்கள் அனைவரும் சென்னை அணி ரசிகர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in