The Indian Times

போட்டியாளர்களாக களம் இறங்கிய வில்லன்கள்.. படாதபாடு படும் டூப்புகள்… Top Cooku Dupe Cooku Promo

சீரியல்களுக்கு பெயர் போன சன்டிவி தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன் நிறுவனம் தற்போது சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 9 போட்டியாளர்கள் மற்றும் 9 டூப்பு குக்குகள் களம் இறங்க உள்ளனர். இதில் நடுவராக செப் வெங்கடேஷ் பட் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இன்ப அதிர்ச்சியை பார்வையாளர்களுக்கு கொடுத்து இருந்தது. இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியை அறிவித்து இருக்கிறது.

இந்நிகழ்ச்சி வருகிற மே மாதம் 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SUN TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in