The Indian Times

வலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் அதிரடி – மிரளும் ரசிகர்கள்

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர். ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.  ஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிவடைகிறது. கடைசியாக தல அஜித்தின் இன்ட்ரோ ஒரு குத்து பாடலை படமாக்கி முடித்துள்ளனர்.

இதையடுத்து இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் சில காட்சிகளும் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவற்றை எடுக்க குஜராத் அல்லது ராஜஸ்தானுக்கு படக்குழுவினர் செல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளது .

Advertisement

ராஜஸ்தானில்தான் இந்த க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாம். ஏற்கனவே தீரன் படத்தில் சில காட்சிகளை ராஜஸ்தானில் எடுத்திருந்தார் வினோத் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜனவரி இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என படக்குழு வட்டாரங்களிலிருந்து தகவ்கள் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in