இவருதான் உண்மையான ஆம்பள..வில் ஸ்மித்தை பாராட்டிய வனிதா | Vanitha Vijayakumar

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்திதான் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவியைப் பற்றி உருவக்கேலி செய்து பேசியவரை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம். இது குறித்து பலவிதமான கருத்துக்கள் உலா வருகின்றன. உருவக்கேலி செய்வது எந்த அளவிற்கு தவறானதோ அதே அளவிற்கு தவறானது அடிதடி வைலன்ஸ் என்றும், அவர் மனைவிக்காக அடித்தது சரிதான் என்றும் உருவக்கேலி செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றும் ஒவ்வொருவர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவருதான் உண்மையான ஆம்பள..வில் ஸ்மித்தை பாராட்டிய வனிதா | Vanitha Vijayakumar 1
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜடா ஸ்மித்துடன் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த காமெடியன் கிறிஸ் ராக் வில் ஸ்மித்தின் மொட்டை தலையை பற்றி கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான வில் ஸ்மித் மேடைக்குச் சென்று தொகுப்பாளர் கிறிஸ்ஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அலோபீசியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட ஜடா ஸ்மித்க்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதனால் அவர் முடிகளை இழந்து காணப்படுகிறார். அவரை கிறிஸ் உருவக்கேலி செய்ததால் கடுப்பாகியுள்ளார் வில் ஸ்மித். மேலும் தனது மனைவி குறித்து ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

விளம்பரம்

இவருதான் உண்மையான ஆம்பள..வில் ஸ்மித்தை பாராட்டிய வனிதா | Vanitha Vijayakumar 2

இதைத் தொடர்ந்து தான் செய்த இந்த செயலுக்காக மனம் வருந்தி வில் ஸ்மித் மன்னிப்பும் கேட்டுவிட்டார். தற்போது வில் ஸ்மித் செய்த செயலை வனிதா பாராட்டி பேசியுள்ளார். மனைவிக்காக அவர் செய்த செயலை பாராட்டி வனிதா தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். மேலும் உங்களின் ரசிகை என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..!!

விளம்பரம்

https://youtu.be/mJo7LtJStAc?t=11

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment