The Indian Times

Vanitha கொடுத்த பேட்டி..என்ன கேள்வி கேட்க தகுதி இருக்கனும், ரம்யா கிருஷ்ணனை மறைமுகமாக தாக்கிய வனிதா | New anger Interview 1

Vanitha Vijayakumar BiggBoss அல்டிமேட்டிலிருந்து அதிரடியாக விலகிவிட்டார். விலகலுக்குப்பின் அவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் அவர் தான் வெளியேறியதற்கான காரணங்களை கூறினார். எனது தந்தை கூட என்னை வீட்டிலிருந்து துரத்தினார். இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு நான் நடுத் தெருவில் நின்றேன் ஆனால் பிக்பாஸ் வீட்டில் நான் வெளியேறுகிறேன் என்று சொல்லும் போது போக வேண்டாம் என்று கூறி என்னை தடுத்தனர் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் ரம்யா கிருஷ்ணனுக்கும் தனக்கும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியல் சண்டை ஏற்பட்டது தற்போது மீண்டும் ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவார் என்ற பயத்தில் தான் விலகிவிட்டதாக சிலர் வதந்திகள் கிளப்பிவிடுகின்றனர் அதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

Vanitha

Advertisement

Vanitha தற்போது அவரது மூத்த மகள் ஜோவிகா அவரை பேட்டி எடுத்துள்ளார். அதில் அவர் வனிதாவிடம் நான் உங்களைப்பற்றி வந்த நிறைய கமெண்டுகளைப் படித்துள்ளேன் அதனால் சில கேள்விகளை கேட்க விரும்புவதாக கூறி பேட்டியை தொடங்குகிறார். அப்போது ஏன் பிக்பாஸை விட்டு விலக காரணம் என்ன என கேட்டபோது, அந்த வீட்டில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர் பிக்பாஸ் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறது. அதனால்தான் கமல் சாரே இந்த நிகழ்ச்சியிருந்து சப்பைக் காரணம் கூறி விலகியுள்ளார், கேள்வி கேட்பவருக்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் கமல் சார் போன்ற பெரிய ஆளுமைகள் கேட்டால் பராவயில்லை, அவரே விலகிய பின்பு வேறு யாருக்கும் பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை அதனால்தான் விலகிவிட்டேன் என்று கூறினார்.

Advertisement

மேலும் தனக்கு உடல்நிலை மற்றும் மனநிலை சரியாக இல்லை என்றும், தான் வெளியேறிய பின்புதான் பிக்பாஸ் டீம் தன்னிடம் சிம்புதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார், மீண்டும் உள்ளே செல்ல உங்களுக்கு விருப்பமா என கேட்டதாகவும், அதற்கு வனிதா இல்லை என்னால் முடியாது என மறுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் எனக்கு சண்டை போடவே தெரியாது என்றும், என்னிடம் சண்டை போட்டால் தான் Famous ஆக முடியும் என்று வேண்டும் என்றே சண்டை போட்டதாகவும் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video

https://youtu.be/n5AXvFN1pHo?t=9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in