The Indian Times

நிரூப்பை அடிக்க பாய்ந்த சினேகன்..தண்ணியை கோரி ஊற்றிய பாலாஜி.. கைகலப்பாக மாறிய டாஸ்க்

தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்துவிட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. இது டிவியில் ஒளிபரப்பபடுவதில்லை மாறாக பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பாகிறது.

Advertisement

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர் பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.  Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

Advertisement

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நிரூப் பாத்ரூமில் சென்று ஒளிந்து கொள்கிறார். அப்போது அங்கே வரும் சினேகன் கதவை உடைத்து உள்ளே சென்று நிரூப் கையில் இருந்து ஹார்டின்களை பிடுங்குகிறார். அப்போது அங்கு வந்த பாலாஜி இருவர் மீதும் தண்ணியை கோரி ஊற்றுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in