உலகளவில் 100 கோடி வசூல் பெற்ற தல தளபதி… எத்தனை நாட்களில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இரண்டுபெரும் தூண்கள் என்று சொன்னால் அது விஜய் மற்றும் அஜித் மட்டுமே.சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பிறகு இவர்கள் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.இவர்களுக்கு இடையே எந்த போட்டியோ பொறாமையோ இல்லை,ஆனால் இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இருவரது ரசிகர்களிடமும் உள்ளது.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகும் பொழுதே இப்படி என்றால் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பதை போல தற்போது பல ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் மோதி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

உலகளவில் 100 கோடி வசூல் பெற்ற தல தளபதி... எத்தனை நாட்களில் தெரியுமா? 1

விளம்பரம்

இதுவரை அஜித் விஜய் படங்கள் மோதியதில் அதிகம் விஜய் படம் தான் வெற்றிபெற்றுள்ளது.ஆனால் இந்த முறை இருவருமே தங்களது படத்தில் மிரட்டியுள்ளனர்.இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதன்படி அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.துணிவு காலை 1 மணி முதல் காட்சிகளை திரையரங்கு ஆரம்பித்துள்ளது.அதேபோல் வாரிசு படமும் அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் தொடங்கியது.இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

உலகளவில் 100 கோடி வசூல் பெற்ற தல தளபதி... எத்தனை நாட்களில் தெரியுமா? 2

விளம்பரம்

இரண்டு படங்களும் தற்போது வெற்றிபெற்றுள்ளதாக படக்குழுக்கள் அறிவித்துள்ளது.படங்கள் வெளியாகிய நாளில் இருந்து துணிவு படம் வாரிசை வசூலில் முந்தி உள்ளது.தற்போது இந்த இரண்டு படங்களும் உலகளவில் 100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.சரிசமமான வசூலை பெற்று இருவரும் ஒரே நேர்கோட்டில் உள்ளனர்.இதனால் ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment