வாரிசு – திரை விமர்சனம் (?/5)

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.அதன்படி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் சரத்குமார்,ஷாம்,பிரபு ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என கீழே விமர்சனத்தில் காணலாம்

வாரிசு - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

ராஜேந்திர குருப் நிறுவனத்தின் தலைவராக வருகிறார் சரத்குமார்.இவருக்கும் தொழிலில் ஜெயபிரகாஷ் குரூப் நிறுவனத்தின் தலைவராக வரும் பிரகாஷ் ராஜுக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.தனக்கு பிறகு தனது நிறுவனத்தினை பார்த்துக்கொள்ள தனது கடைசி மகன் விஜயை தேர்வு செய்கிறார் சரத்,ஆனால் விஜய் மறுப்பு தெரிவித்து சொந்தக்காலில் நிற்பேன் என கூற சரத்குமார் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.வெளியே செல்லும் விஜய் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து அதில் வெற்றியும் பெறுகிறார்.அதே சமயம் தனக்கு கொடிய வியாதி இருப்பதை அறிந்துகொள்ளும் சரத்குமார்,தனது மனைவி ஆசைப்படி 60வது கல்யாணத்தினை நடத்த திட்டமிடுகிறார்.அதற்கு விஜயும் வருகை தருகிறார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனை வெடித்து சரத்குமாரின் இரண்டு மகன்கள் வெளியே பிரிந்து செல்கின்றனர்.இறுதியாக சரத்குமார் தனது நிறுவனத்தின் முழு பொறுப்பையும் விஜயிடம் ஒப்படைக்கிறார் ,ஆரம்பத்தில் ஏற்க மறுக்கும் விஜய் தந்தைக்கு நோய் இருப்பதை தெரிந்துகொண்டு பின்னே ஒப்புக்கொள்கிறார்.தொழிலில் போட்டியாக வந்த பிரகாஷ் ராஜை, விஜய் எப்படி சமாளிக்கிறார் அவரால் என்ன பிரச்சனை வந்தது,அதே சமயம் பிரிந்த குடும்பத்தை விஜய் எப்படி இணைக்கிறார் என்பதே மீதி படத்தின் கதை.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

வாரிசு - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

இளம் துடிப்பான நாயகனாக திரையில் தோன்றுகிறார் விஜய்,இவரை பார்க்கும் பொழுது வயது இவருக்கு மட்டும் பின்னே செல்கிறதா என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சச்சின் படத்தில் இருக்கும் விஜயை போல ஜாலியான கதாபாத்திரத்தில் வந்து அடித்து துவம்சம் செய்துள்ளார் ,வழக்கம் போல நடனத்தில் மிரட்டி எடுத்துள்ளார் அதுவும் ரஞ்சிதமே பாடல் முடிவில் இவர் ஆடிய ஆட்டத்திற்கு திரையரங்கே சும்மா அதிர்ந்துவிட்டது. ஜாலி கேரக்டரில் இருந்து அதிரடி கேரக்டருக்கு செல்லும் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பொங்கல் விருந்து படைக்கிறார் என்று தான் கூற வேண்டும்,பொதுவாகவே பெரிய ஹீரோக்கள் படத்தில் கதாநாயகிகளுக்கு இடம் குறைவுதான்,அந்த வரிசையில் ராஷ்மிக்கா மந்தனா ஒன்றும் விதிவிலக்கல்ல.சரத்குமார் தனது அனுபவ நடிப்பினை காண்பித்துள்ளார்.மேலும் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெய சுதா ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளனர்.விஜய்க்கும் யோகிபாபுவுக்கும் இடையே உள்ள காம்பினேஷன் படத்திற்கு பெரும் பலத்தினை கொடுத்துள்ளது.யோகிபாபுவின் நகைச்சுவைகள் பல இடத்தில் ஒர்கவுட் ஆகியுள்ளது.குடும்பம் பற்றி இயக்குனர் கூறவந்தது சரியே ஆனால் அதனை திரையில் சரியாக கொண்டு வர வம்சி தவறிவிட்டார்.முதல் பாதியில் அதிகளவு பாட்டுக்கள் திணிக்கப்பட்டது போல உள்ளதால் அதிகளவு எரிச்சலை அடைய செய்கிறது.படத்தின் நீளம் அதிகமாக உள்ளது படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆகும்.இரண்டாவது பாதியில் போதும் போதும் என்கிற அளவு சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது,சண்டை காட்சியில் தெலுங்கு சாயல் அதிகம் இருப்பதை காணமுடிகிறது.வரும் காட்சிகளை முன்கூட்டியே கணிக்க முடிவது படத்தின் விறுவிறுப்பினை மொத்தமாக கெடுத்துள்ளது.தமன் இசையில் ரஞ்சிதமே , தீ தளபதி பாடல்கள் மட்டுமே நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது,இருப்பினும் பின்னணி இசையில் பிரித்தெடுத்துள்ளார் தமன்,விஜயின் என்ட்ரி காட்சிகளுக்கு இவர் போடும் பிஜிஎம் கூஸ்பம்பஸ் வரவழைக்கிறது.திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி ,படத்தின் நீளத்தினை குறைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில் நல்ல குடும்ப செண்டிமெண்ட் படம் ஆனால் சென்டிமென்டை ஓவர்டேக் செய்துள்ள ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள்,தேவையில்லாத பாடல்கள் படத்தினை கெடுக்கிறது

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

வாரிசு படத்திற்கு தி டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5 /5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment