வெந்து தணிந்தது காடு..மக்களின் எதிர்பார்ப்பினை தனித்ததா? திரை விமர்சனம் (?/5)

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு.இவர் பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் ஆவார்.சிறுவயது முதலே படத்தில் நடித்து வருவதால் இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமே உண்டு.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இருந்து பெரும் ரசிகர்கள் ரசிகைகள் கூட்டம் சிம்புவுக்கு உருவாகியது.தற்போது சிம்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் ஜெயமோகன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.சித்தி இத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய,ஆண்டனி படத்திற்கு எடிட்டிங் வேலைகளை செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இந்த மூஞ்சி எங்க சொந்த வீடு கட்டப்போகுதுன்னு சொன்னாங்க...இதுதான் நான் கட்டும் சொந்த வீடு-அறந்தாங்கி நிஷா

வெந்து தணிந்தது காடு..மக்களின் எதிர்பார்ப்பினை தனித்ததா? திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

படத்தில் சிம்பு தனது அம்மா ராதிகா மற்றும் தங்கை உடன் கிராமத்தில் வசித்து வருகிறார்.அங்கு அவர் காட்டில் வேலை செய்து வருகிறார்.ஒருநாள் காடு தீப்பிடித்து எரிந்து விடுகிறது.காட்டின் உரிமையாளர் சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்கவே சிம்பு அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறார்,இதனை கண்டு அதிர்ச்சியாக ராதிகா,ஏற்கனவே மகன் கொலைகாரன் ஆகுவான் என ஜாதகத்தில் இருப்பதாக கூறி பயந்து அவரை வெளியூர் அனுப்ப திட்டமிடுகிறார்.சிம்புவின் தாய் மாமா அவரை மும்பை அனுப்ப திட்டமிடவே அன்று இரவே அவரது மாமா தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிறார்.இது சிம்புவுக்கு பேரதிர்ச்சியாகி விடுகிறது.உடனே சிம்பு அங்கிருந்து மும்பை சென்று இசக்கி பரோட்டா கடையில் பணிக்கு சென்று அங்கு சமையல் கற்றுக்கொள்கிறார் .அங்கு தான் சித்தி இத்தானியை பார்த்து காதலில் விழுகிறார்.பின்னர் அது கேங்ஸ்டர் இடம் என்பது தெரிந்து அங்கிருந்து வெளியே செல்ல முயற்சிக்கும் பொழுது எதிர் அணி கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விடுகிறது,சிம்பு அவர்களிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுடுகிறார்.இதனால் அவர் என்ன இன்னல்களை சந்திக்கிறார்,அதன்பின் சிம்புவுக்கு நடந்தது என்ன என்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.....

வெந்து தணிந்தது காடு..மக்களின் எதிர்பார்ப்பினை தனித்ததா? திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

நடிப்பின் உச்ச எல்லைக்கே சிம்பு சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.கோபம்,தயக்கம்,காதல்,ரொமான்ஸ் என நவரசங்களையும் கொடுத்து அசத்திவிட்டார் சிம்பு.தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்து முழு பத்தினையும் தாங்கி பிடித்துவிட்டார்.கதாநாயகி சித்தி இத்தானி முதல் படம் போலவே இல்லை,ரசிகர்களை தனது நடிப்பினால் சுண்டி இழுத்துவிட்டார்,அம்மாவாக நடித்துள்ள ராதிகா தனது அனுபவ நடிப்பினை காண்பித்து ரசிகர்களை கலங்கடித்துவிட்டார்.நீரஜ் மாதவ்,அப்புக்குட்டி நடிப்பு சூப்பர்.மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக பேசும் அளவிற்கு இல்லை என்றே கூறவேண்டும்.ஏஆர் ரஹ்மான் பாடல் மற்றும் இசை படத்திற்கு நல்ல வலுவை சேர்த்துள்ளது ,ஆனால் இடையே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தினை குறைப்பது போல உள்ளது.வழக்கமாக உள்ள கவுதம் மேனன் படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.படத்திற்கு வாய்ஸ் ஓவர் இல்லாதது படத்திற்கு கூடுதல் பலத்தினை சேர்த்துள்ளது.கவுதம் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை செதுக்கி எடுத்துள்ளார்.படத்தில் சண்டை காட்சியை வடிவமைத்த Yannick Ben மற்றும் Lee Whittaker பிரதமபடுத்தியுள்ளனர்.மொத்தத்தில் இப்படத்தில் இருப்பது கதை அல்ல ஒருவரின் வாழ்க்கை.

கட்டாயம் படிக்கவும்  திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இப்படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment