The Indian Times

ஹண்டர் வண்டார் பாருடா..! முதல் நாளே பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த ரஜினிகாந்த்..! வேட்டையன் முதல்நாள் கலெக்ஷன்..!

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்.இவர் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப், ராணா, மஞ்சு வாரியார், பகத் பாசில் என பெரிய நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்து உள்ளது.

Advertisement

இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை படம் பெற்று வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்களை இப்படம் திருப்தி படுத்தி இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படம் வெளியாகி நேற்று முதல்நாளே ரூ . 72கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in