விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.பின்னர் தனது நகைச்சுவை திறமையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் வெள்ளித்திரையிலும் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இவர் பீஸ்ட் பட ஜாலியா ஜிம்கானா பாடல் செட்டிற்கு நேரில் சந்தித்து தளபதி விஜயை நேரில் சந்தித்துள்ளார்.டான் பட ஷூட்டிங் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் பீஸ்ட் பட ஷூட்டிங் நடந்து வருவதால் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவாங்கி தளபதி விஜயை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.இந்த புகைப்படத்தினை தற்போது தனது ட்வீட்டரில் சிவாங்கி பதிவிட்டு நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
This happened 🥶🥶 Thankyou @actorvijay sir for the kind words❤️ @Siva_Kartikeyan anna thankyou na❤️ pic.twitter.com/CwbLZcCQoW
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 26, 2022
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in