மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!!

ஆணுக்கு நிகர் அல்ல பெண் என்று கூறி ஆண் ஆதிக்கம் அதிகம் காணப்பட்ட நாடு நம் நாடு. இருப்பினும் ஆண்களை காட்டிலும் பல மடங்கு வலிமை மிக்கவர்கள் பெண்கள் என பல தடைகளை உடைத்தெறிந்து சாதித்து காட்டியவர்கள் பெண்கள். ஜான்சி ராணி , அன்னை தெரசா என தொடங்கி இன்று வரை அணைத்து துறையிலும் சாதனை படைத்து வரும் வீர மங்கைகள் ஏராளம். அவர்களை கௌரவிக்கும் விதமாகவே இன்று மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை நாம் கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் பெண்களை போற்றும் விதமாக பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!! 1

விளம்பரம்

அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது இக்காலகட்டத்தில் சாதாரணமான ஒன்று. அவ்வரிசையில் இரு வேறு தொழிலில் உச்சத்தை அடைந்த இரு பிரபலங்கள் விராட் கோலி மற்றும் அணுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர் .

மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!! 2

விளம்பரம்

இவரகள் பல வருடங்களாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்த அனுஷ்கா சர்மா கர்ப்பமான பிறகு தன் கவனத்தை குழந்தையை பார்த்து கொள்வதன் மேல் செலுத்தினார். சிறிது மாதம் களைத்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன் மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பெண்களை போற்றும் விதமாக மகளிர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!! 3

விளம்பரம்

அதில் விராட் கோலி பதிவிட்டிருப்பது, ஒரு குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகெலும்பை குளிர்விப்பது மற்றும், நம்ப முடியாத ஆச்சரியமான அனுபவமாகும். அதன் பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும், தெய்வீகத்தன்மையையும், கடவுள் ஏன் உயிரை அவர்களுக்குள் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகக் கடுமையான, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தன் தாயைப் போல வளரப் போகிறவளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். மேலும் உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment