தொகுப்பாளினி பிரியங்கா வீட்டிற்கு புதிய வரவு…மகிழ்ச்சியில் பிரியங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தான் தொகுத்து வந்தார், யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  RED-ங்க ஜனனிக்கு RED தான் நல்லா இருக்கும்.. சும்மா தேவதை மாதிரி இருப்பாங்க... அசத்தும் ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தொகுப்பாளினி பிரியங்கா வீட்டிற்கு புதிய வரவு...மகிழ்ச்சியில் பிரியங்கா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்தார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கட்டாயம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தினார் பிரியங்கா.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.இவரின் இந்த வீடியோவை காண்பதற்கே பல லட்சம் மக்கள் உள்ளனர்.தொகுப்பாளர் துறையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவர் முன்னணியாக உள்ளார்.அந்த அளவிற்கு இவர் மக்களை சேர்த்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது அப்பா இறந்த கதை குறித்தும்,தன் அம்மா.இவரையும் தம்பியையும் எப்படி வளர்த்தார்கள் என்பது வரை அனைத்தையும் தெரிவு படுத்தி மக்கள் மனதினை கரைத்த.ஒருவருக்குள் இவ்வளவு சோகமா என மக்களே இவரை கண்டு ஆச்சரியமடைந்தனர்

கட்டாயம் படிக்கவும்  விஜய் UNCLE.. இது உங்களுக்குத்தான்.. ரஞ்சிதமே முத்தம் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பா

தொகுப்பாளினி பிரியங்கா வீட்டிற்கு புதிய வரவு...மகிழ்ச்சியில் பிரியங்கா 2

விளம்பரம்

இவருக்கு ரோஹித் என்ற தம்பி ஒருவாறு இருக்கிறார்.இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் ஆகியது.தற்போது இவரின் தம்பி மனைவி கர்ப்பமாக உள்ளார்.இதனால் தங்களது வீட்டிற்கு புதிய உறவு வருவதை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.இவர் தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு ஆண்டிகிட்ட வாமா என பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.கூடியவிரைவில் அத்தை ஆக போகும் ப்ரியங்காவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு முடிவெட்டுறதுக்குள்ள ஆல்யா மானசா படுற பாடு இருக்கே... ஐயோ பாவம்ங்க ஆல்யா மானசா

தொகுப்பாளினி பிரியங்கா வீட்டிற்கு புதிய வரவு...மகிழ்ச்சியில் பிரியங்கா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment