The Indian Times

சிவாங்கியை காப்பாற்றிவிட்டு என்னை நீக்கிவிட்டார்கள்..? உண்மையை கூறிய விஜே விஷால்

தமிழ் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சி வித்தியாசமான நிகழ்ச்சியை தொடங்கி அதில் சாதனையும் புரிந்துள்ளது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஆண்டு தோறும் தொடர்ந்து சீசனாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று கூறினால் மிகையாகாது.அந்தளவுக்கு ரசிகர்களை மனம் திறந்து சிரிக்க வைத்து அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.தற்போது 3சீசன்கள் வெற்றிகரமாக கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவது எலிமினேஷனில் காளையன் வெளியேறினார்.மூன்றாவது எலிமினேஷனில் ராஜ் ஐயப்பா வெளியேறினார்.

அதன்படி கடந்த வாரம் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு வந்த சிவாங்கி மற்றும் விஷால் இருவரில் குறைந்த வாக்குகளை பெற்று விஷால் வெளியேறினார்.இதற்கு சிலர் சிவாங்கியை காப்பாற்ற விஷாலை நீக்கிவிட்டதாக கூறி வந்த நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஷால்,நானும் சிவாங்கியும் நல்ல நண்பர்கள் எங்களை பற்றி வரும் மீம்ஸ்களை நாங்கள் ஒருபோதும் கண்டுகொள்வது கிடையாது என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in