இறுதி கட்டத்தில் பிக் பாஸ்… இருவரில் வெற்றிக்கோப்பை யாருக்கு? இணையான ஆதரவை குவிக்கும் அசீம் மற்றும் விக்ரமன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தான்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவற்றிற்கும் இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்று தான் கூறவேண்டும்.தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதிலும் பயங்கர ஆதரவு திரட்டி இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறது பிக் பாஸ்,தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும்.

இறுதி கட்டத்தில் பிக் பாஸ்... இருவரில் வெற்றிக்கோப்பை யாருக்கு? இணையான ஆதரவை குவிக்கும் அசீம் மற்றும் விக்ரமன் 1

விளம்பரம்

இதுவரை நடைபெற்ற சீசன்களில் போட்டியாளர்கள் யார் வெற்றிபெறுவார்,மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை முன் கூட்டியே கணித்துக்கொள்ள முடிந்தது.ஆனால் இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்பது கணிக்க முடியாமல் உள்ளது. தற்போது இந்த போட்டியில் மைனா,ஷிவின்,அமுதவாணன்,விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.இதில் ஒருவர் தான் வெற்றிபெறப்போகிறவர்,இருப்பினும் இறுதி போட்டியில் அசீம் மற்றும் விக்ரமனும் பங்குபெற போவது அனைவர்க்கும் தெரிந்ததே,ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருவருக்கும் ரசிகர்கள் சரிசமமான அளவில் இருந்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.இதனாலேயே இந்த முறை இருவரில் யார் வெற்றிபெறுவார் ,யார் இரண்டாவது இடத்தினை பெறுவார் என்ற பெரும் கேள்விக்குறி கிளம்பியுள்ளது.

இறுதி கட்டத்தில் பிக் பாஸ்... இருவரில் வெற்றிக்கோப்பை யாருக்கு? இணையான ஆதரவை குவிக்கும் அசீம் மற்றும் விக்ரமன் 2

விளம்பரம்

காரணம் இருவருக்கும் உள்ள ரசிகர்கள் தான்.விக்ரமனுக்கு அரசியல் பின்பலம் உள்ளது என்பது தெரிந்த ஒன்றே,அதனால் அவருக்கு அவரின் கட்சியில் உள்ளவர்கள் ஆதரவு அளிக்கலாம்,அண்மையில் விக்ரமன் இருக்கும் கட்சியின் தலைவரே அவருக்கு வாக்குகள் செலுத்தி வெற்றிபெற கூறிய செய்திகள் இணையத்தில் காட்டு தீ போல பரவியது.இதனால் விக்ரமன் வெற்றிபெறலாம் என முடிவுக்கு வந்தாலும் இணையத்தில் எங்கு பார்த்தாலும் அஸீமின் ரசிகர்கள் கூட்டம் தான்,மக்கள் நாயகன் அசீம்,டைட்டில் வின்னர் அசீம் என இவரை தலையில் தூக்கி வைத்து ஒரு கூட்டம் கொண்டாடி வருகிறது.இதனால் இருவருக்கும் இடையே போட்டி கூடுதலாக அதிகரித்துள்ளது.முந்தய சீசன்களில் ஒருவருக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு அளித்து வந்தனர் ஆனால் இந்தமுறை இருவருக்கு மக்கள் ஆதரவினை அளித்து வருகின்றனர்.

இறுதி கட்டத்தில் பிக் பாஸ்... இருவரில் வெற்றிக்கோப்பை யாருக்கு? இணையான ஆதரவை குவிக்கும் அசீம் மற்றும் விக்ரமன் 3

விளம்பரம்

இப்படி இரண்டு பேருக்கு மக்கள் ஆதரவு அளிப்பது என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே இதுவே முதல்முறை ஆகும்.சமூகவலைத்தளங்களை தற்போது திறந்தாலே இவர்கள் இருவரின் ரசிகர்கள் தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த முறை யார் வெற்றிபெறுவார் என பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமில்லாமல் போட்டியாளர்களுக்கும் உள்ளது. இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது நாங்கள் தான் என இருவரின் ரசிகர்களும் உறுதியாக உள்ளதால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.நமக்கு பிடித்தவருக்கு ஆதரவு கொடுத்து பொறுத்திருந்து காத்து வெற்றிக்கனியை பெற்றவர் யார் என்பதை காண்போம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment