The Indian Times

கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய காற்றுவெளியிடை பட நாயகி அதிதி ராவ்

பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அதிதி ராவ்.

இப்படத்தினை தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்கள் நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

பின்னர் 2017ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ மற்றும் ஹே சினாமிகா போன்ற தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.

பின்னர் தெலுங்கிலும் அதிதிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது.

தெலுங்கிலும் வரிசையாக படங்கள் நடிக்க தொடங்கி முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயம் ஆனதை தொடர்ந்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

Advertisement

தற்போது இவர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in