பட வாய்ப்பு இல்லை..SOAP-விற்கும் பிரபல தமிழ் நடிகை….சோகத்தை கிளப்பிய நடிகையின் கதை

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா.தாயை போல சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என எண்ணி காலெடி எடுத்து வைத்தவர்.1989 ஆம் ஆண்டு வெளியாகிய அடவிலோ அபிமன்யு என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் மட்டும் தெலுங்கு படங்களில் நடிகையாக வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

பட வாய்ப்பு இல்லை..SOAP-விற்கும் பிரபல தமிழ் நடிகை....சோகத்தை கிளப்பிய நடிகையின் கதை 1

விளம்பரம்

எஜமான்  படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நாடகங்கள் நடித்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா.இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்காக சோப் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.இவரின் சோக கதை தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் கவலை ஆக்கியுள்ளது.இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் அவர் கூறியதாவது,நான் முன்னணி நடிகையாக உருவெடுத்து வரும் பொழுது திருமணம் ஆகிவிட்டது,மேலும் நான் நடித்த பொழுது வாங்கிய சம்பளம் எனது குடும்பத்திற்காகவே செலவாகி விட்டது.மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் வந்தால் சம்பாதிப்பது எப்படி,அதனால் தான் சோப் விற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்பு இல்லை..SOAP-விற்கும் பிரபல தமிழ் நடிகை....சோகத்தை கிளப்பிய நடிகையின் கதை 2

விளம்பரம்

நான் ஆல்கஹாலில் எனது பணத்தினை செலவழிக்கவில்லை,மளிகை கடையில் கணக்கு வைத்து பொருள் வாங்கிக்கிறேன்.நாம் கடன் வைக்க கூடாது,எனது தந்தை அவரது சாவும் பொழுது சாவு செலவுக்கு கூட காசு வைத்து தான் சென்றார்.எனக்கும் எங்க அம்மா லட்சுமிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை,நான் எதற்காகவும் என் அம்மாவிடம் போய் நிற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.மேலும் அங்குள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சோப் விற்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமா ஐஸ்வர்யாவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment