The Indian Times

பொல்லாதவன் பட கதாநாயகி திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமாவுக்குள் களம் இறங்கியவர் திவ்யா,பின்னர் இவருக்கு நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக குத்து படத்தில் வாய்ப்பு கிடைத்தது,இதனை சரியாக பயன்படுத்தி இப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இப்படத்திற்கு பின்னர் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக கிரி படத்திலும் நடித்தார்,இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்து பல ரசிகர்களையும் கவர்ந்தார் திவ்யா.

Advertisement

அதன்பின்னர் தமிழ் படத்தில் வாய்ப்பு இல்லாததால் கன்னட சினிமாவில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்,தமிழில் வெற்றிப்படம் கொடுத்தாலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க யாருமில்லை.

மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொல்லாதவன் படத்தில் நடித்து மாபெரும் வரவேற்ப்பு பெற்றார்,இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

பின்னர் சினிமாவுக்கு இடைவெளிவிட்டு அரசியலில் களம் இறங்கி பாராளுமன்ற உறுப்பினரும் ஆகினார்,தற்போதும் அரசியலில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இதனால் இவர் படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in