The Indian Times

மேல கை வைக்காத.. தோளில் கைவைத்த ரசிகையை திட்டிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.இவர்கள் குழந்தைகளுடன் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி கும்பிட வந்துள்ளனர்.

Advertisement

அங்கு கோவிலில் ரசிகர்கள் நயன்தாராவை அழைத்துக்கொண்டு இருந்ததால்.ஒரு 5 நிமிடம் சாமி கும்பிட விடுங்க என டென்ஷன் ஆகி கத்தினார்.பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில் ரசிகை ஒருவர் கை அவர் மீது படவே கோவத்தில் அந்த ரசிகையை திட்டியுள்ளார் நயன்.இதுவரை பலமுறை நயன்தாரா வெளியே வந்துள்ளார்.ஆனால் ஒருமுறையும் இப்படி கோவப்பட்டதே இல்லை,இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Embed video credits : POLIMER TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in