The Indian Times

எங்களை சாமி கும்பிட விடுங்க.. கடுப்பாகி கத்திய நடிகை நயன்தாராவால் பரபரப்பு.. மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.இவர்கள் குழந்தைகளுடன் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி கும்பிட வந்துள்ளனர்.

Advertisement

அங்கு நயன்தாராவை பார்க்க கூட்டம் கூடியது,கருவறையில் சுவாமி கும்பிட்டு கொண்டிருக்கும் நயன்தாராவை அழைத்து கொண்டே ரசிகர்கள் இருந்ததால் கடுப்பாகிய நயன்தாரா ஒரு 5 நிமிடம் சும்மா இருங்களேன் எங்களை சாமி கும்பிட விடுங்க என கோபமாக கத்தி பேசியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.உடனே விக்கி அங்கிருந்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தயவு செய்து சாமி கும்பிட விடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது விநயத்தில் வேகமாக வைரலாகி வருகிறது

Embed video credits: sakthi vikatan

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in