The Indian Times

ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய புஷ்பா… புஷ்பா 2 படத்தின் மினி டீசர் இதோ

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் புஷ்பா 2.இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இறுதி கட்டத்தில் பகத் பாசில் போலீசாக வந்து கலக்கி இருப்பார்.இப்படம் உருவாகும் பொழுதே இரண்டு பாகங்களாக தான் தயார் செய்ய இயக்குனர் திட்டமிட்டுள்ளார் தற்போது முதல் பாகத்தினை எடுத்து முடித்து படக்குழு வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் ஆக பகத் பாசில் தான் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.அல்லு அர்ஜுனுக்கு வில்லன் ஆக படம் முழுவதும் நடிகர் விஜய் சேதுபதி தான் வருவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது,இந்நிலையில் இப்படத்தில் முன்னணி தமிழ் கதாநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி படத்தில் புதிய போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்போது ராஷ்மிக்கா பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மினி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் புஷ்பா ஜெயிலில் இருந்து தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.அனைவரும் புஷ்பாவை எங்கே என தேடி போராட்டம் செய்கின்றனர்.இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் புதிய வீடியோ காட்சிகள் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக .அறிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

https://twitter.com/i/status/1643493606945333254

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in