கலவரத்தில் புரட்சித்தலைவிக்கு முத்தம் கொடுத்த தொண்டர் | கலாய்க்கும் நெட்டிசன்கள்

அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓபிஎஸ் இருவரில் யாராவது ஒருவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என தொண்டர்கள் முடிவெடுத்தனர்.அதன்படி அதிமுக கட்சி இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ள நிலையில் அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கலவரத்தில் புரட்சித்தலைவிக்கு முத்தம் கொடுத்த தொண்டர் | கலாய்க்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை எரிந்து ,தாக்கியும்.கார்களை அடித்து நொறுக்கியும் கலவரங்களை செய்துள்ளனர்.மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலக கதவை உடைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை தாக்கி விரட்டி அதிமுக அலுவலகத்தினை முழுவதுமாக கைப்பற்றினர்.போலீசார் அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

கலவரத்தில் புரட்சித்தலைவிக்கு முத்தம் கொடுத்த தொண்டர் | கலாய்க்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் போராட்டத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் அடித்து நொறுக்கப்பட்டது மேலும் பெண் தொண்டர்கள் செருப்பினால் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தினை தாக்கியுள்ளனர்.மேலும் அலுவலகத்தின் மேல் நின்று ஓபிஎஸ் புகைப்படம் மற்றும் அம்மா புரட்சி தலைவி ஜெயலலிதா புகைப்படத்தினை தூக்கி காட்டியவாறு தொண்டர்கள் நின்றுகொண்டிருக்க,ஒரு தொண்டர் அதில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை கண்ட நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர்

கலவரத்தில் புரட்சித்தலைவிக்கு முத்தம் கொடுத்த தொண்டர் | கலாய்க்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment