The Indian Times

பழமுதிர்சோலையில் முருகனை தரிசித்த தொகுப்பாளினி DD புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .

தொகுப்பாளர் வேலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

Advertisement

அண்மையில் உலக நாயகன் நடித்த விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியினை டிடி சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.

தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கலக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் பழமுதிர்சோலையில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in