சுதந்திரத்திற்காக போராடும் இளைஞனாய் கவுதம் கார்த்திக் அசத்தும் ஆகஸ்ட் 16 1947 படத்தின் FIRST SINGLE வெளியாகியது

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் எம் எஸ் பாஸ்கர் மகளின் அழகிய புகைப்படங்கள்

சுதந்திரத்திற்காக போராடும் இளைஞனாய் கவுதம் கார்த்திக் அசத்தும் ஆகஸ்ட் 16 1947 படத்தின் FIRST SINGLE வெளியாகியது 1

விளம்பரம்

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் மிரட்டும் VIJAYTV சீரியல் GABY-ன் அழகிய புகைப்படங்கள்

சுதந்திரத்திற்காக போராடும் இளைஞனாய் கவுதம் கார்த்திக் அசத்தும் ஆகஸ்ட் 16 1947 படத்தின் FIRST SINGLE வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் பொன் குமார் இயக்கியுள்ளார்.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெரும் எதிர்பார்ப்பினை அதிகரித்தது.தற்போது இப்படத்தின் கோட்டிக்காரா பயலே என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கவுதம் கார்த்திக்கிற்கு இப்படம் பெரும் திருப்புமுனையை சினிமாவில் ஏற்படுத்தும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் படப்பிடிப்பில் குத்தாட்டம் போட்ட நந்தினி... வைரல் வீடியோ

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment