The Indian Times

சமாதான படுத்த சென்ற பாக்கியாவை திட்டி அனுப்பிய ஜெனி… பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் மாலினி உண்மையை வீட்டில் கூறிவிடுவேன் என கூறி செழியனை மிரட்டியும் வருகிறார்.செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்,என பாக்கியாவிடம் கூறுகிறார்,இருப்பினும் பாக்கியா என் மகன் இனி உன் பக்கம் வரமாட்டான் என கூறுகிறார். அதையும் மீறி மாலினி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து கத்தி கூச்சலிட்டு செழியனை அழைக்கிறார்,மாலினி கோவமடைவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் செழியன்,மேலும் தனக்கும் செழியனுக்கும் இடையே உள்ள வரவை ஜெனியிடம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்,இதனால் ஜெனி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில்,வீட்டை விட்டு வெளியேறிய ஜெனியை சமாதானம் செய்ய போகிறார் பாக்கியா ,அதற்கு ஜெனி உங்களுக்கு இப்படி நடக்க போய் தானே நீங்க தனியா இருக்கீங்க,உங்களுக்கு வந்த மட்டும் பிரச்னை எனக்கு வந்தா அது ஒண்ணுமில்லையா என பாக்கியாவை திட்டி அனுப்பியுள்ளார் ஜெனி.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in