மேடையில் குடிபோதையில் சண்டை இழுத்த நபரை அன்பாக பேசி அனுப்பிய மைக் மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மைக் மோகன்.மைக் மோகன் என்றால் தெரியாத நபர்கள் தற்போதுவரை எவரும் இருக்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவர்.இவர் படத்தில் இடம் பெற்றுள்ள பல பாடல்களும் ஹிட் அடித்து இவருக்கு மைக் மோகன் என்ற பெயரை பெற்றுத்தந்தது.இவருக்கெனே பெரும் ரசிகர்கள் கூட்டமே அந்த நேரத்தில் இருந்தது.இவர் படம் வெளியாகும் நாள் திரையரங்குகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடும்,அந்த அளவிற்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர்.ரஜினி கமல் படங்களுக்கு நிகரான வசூலையும் வரவேற்பினையும் பெற்று தமிழ் சினிமாவையே அசர செய்து தன்னை திரும்பி பார்க்க செய்தார் மோகன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

மேடையில் குடிபோதையில் சண்டை இழுத்த நபரை அன்பாக பேசி அனுப்பிய மைக் மோகன் 1

விளம்பரம்

இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய கன்னட படம் ஆன கோகிலா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து கன்னடம் ,மலையாளம் மற்றும் தெலுங்கு என படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு மூடு பணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வேறு மொழிகளில் கிடைக்காத வரவேற்பு தமிழில் கிடைத்ததால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் மோகன்.பல வெற்றிப்படங்களை இவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நடிகராக மட்டும் இல்லாமல் தமிழில் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தினை இயக்கி இயக்குனராகவும் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

மேடையில் குடிபோதையில் சண்டை இழுத்த நபரை அன்பாக பேசி அனுப்பிய மைக் மோகன் 2

விளம்பரம்

தற்போது ஹரா என்ற படத்தில் கதாநாயகன் ஆகவும்,தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தீபாவளியை முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்,அப்போது மது போதையில் வந்த நபர் மேடையில் கலாட்டா செய்யவே அவரை அன்பாக பேசி அனுப்பியுள்ளார் மோகன்,இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment