The Indian Times

உனக்கும் பழனிசாமிக்கும் கல்யாணமாமே.. நீயெல்லாம் அம்மாவா என கேட்ட கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி வீட்டிற்கு சொல்கிறார். அனைவரும் சொல்லியும் ஈஸ்வரி கேட்காமல் கோபி உடன் செல்கிறார். அங்கு ராதிகா மற்றும் அவரது அம்மாவுடன் கடும் சண்டை போடுகிறார். பின்னர் வீட்டில் ஈஸ்வரி மயங்கி கிடக்கிறார்.அவரை மருத்துவமனைக்கு கோபி அழைத்து செல்கிறார். இதனை கேட்டு பாக்கியா குடும்பத்துடன் ஈஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், பழனிசாமிக்கும் பாக்கியாவுக்கும் திருமணம் செய்து வைக்க பழனிசாமி வீட்டார் முடிவு எடுக்கவே, அது கோபிக்கு தெரிய வருகிறது. உடனே கோபி பாக்கியாவை பார்த்து நீயெல்லாம் அம்மாவா என கேட்கவே பாக்கியா கோவத்தில் வெடித்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in