The Indian Times

தவறி விழுந்ததில் ராதிகா கரு கலைந்தது.. பலியை தூக்கி ஈஸ்வரி மேல் போட்ட ராதிகா… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி வீட்டிற்கு சொல்கிறார். அனைவரும் சொல்லியும் ஈஸ்வரி கேட்காமல் கோபி உடன் செல்கிறார். அங்கு ராதிகா மற்றும் அவரது அம்மாவுடன் கடும் சண்டை போடுகிறார். பின்னர் வீட்டில் ஈஸ்வரி மயங்கி கிடக்கிறார்.அவரை மருத்துவமனைக்கு கோபி அழைத்து செல்கிறார். இதனை கேட்டு பாக்கியா குடும்பத்துடன் ஈஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், ராதிகா தவறி கீழே விழவே அவரது கரு கலைந்து விட்டது. கோபியிடம் ராதிகா அதற்கு காரணம் ஈஸ்வரி எனவும் அவர் தான் தன்னை தள்ளிவிட்டதாக பலி சொல்கிறார். இதனை கேட்ட கோபி ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in