The Indian Times

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தானாம்

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு.

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷனாக அசல் சென்றார்.மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறினார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.

Advertisement

தற்போது இந்த வார நாமினேஷனும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.இந்த வாரம் கதிரவன்,ஜனனி,ரட்சிதா,மைனா ,தனலட்சுமி,குயின்சி ஆகியோர் வெளியே செல்ல நாமினேட் ஆகிய நிலையில் தற்போது தனலட்சுமி மற்றும் குயின்சி தான் கடைசி இடத்தில் உள்ளனர்.இதில் தனலட்சுமியை விட குறைவான வாக்குகளை பெற்று குயின்சி கடைசியாக உள்ளார் எனவே குயின்சி தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in