The Indian Times

அட இவரு வெளியே போயிட்டாரா… 7வது ELIMINATION-ல் சிக்கி வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்…

தமிழில் 5 சீசன்களை கடந்து 6வது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தய சீசன்களை விட இந்த சீசனில் விறுவிறுப்பு சுவாரசியம் அதிகம் ஆகியுள்ளது அதுவும் நிகழ்ச்சி ஆரம்பித்த குறைந்த நாட்களிலேயே சூடுபிடிக்க தொடங்கியது.போட்டியாளர்கள் தங்களது முழு திறமையும் காண்பித்து விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். வாரம் வாரம் ஒவ்வொரு போட்டிகளில் வீடு கலவர பூமியாகி வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷனாக அசல் சென்றார்.மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறினார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.

Advertisement

தற்போது ஏழாவது எலிமினேஷனில் இந்த வாரம் யார் வெளியே சென்றுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.இந்த வாரம் கதிரவன்,ஜனனி,ரட்சிதா,மைனா ,தனலட்சுமி,குயின்சி ஆகியோர் எலிமினேஷனில் இருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று குயின்சி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இது குயின்சி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in