The Indian Times

Anchor ஆக மாறிய ப்ரியங்கா.. கடுப்பாகிய மணிமேகலை.. CWC இந்த வார ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ளது. கடந்த நிகழ்ச்சிகளை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது புதிய போட்டியாளர்களான விடிவி கணேஷ், விஜே திவ்யா,பிரியங்கா, பூஜா,சுஜிதா தனுஷ் , இர்பான், உடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை நடுவராக தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து உள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisement

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், நடுவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரியங்காவை தற்போது செப் தாமு தொகுப்பாளினியாக மாற்றியுள்ளார். இதனால் மணிமேகலை செம்ம கடுப்பாகி உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in