The Indian Times

COOK WITH COMALI சீசன் 4 வெற்றிபெற்றவர் யார் தெரியுமா? வெளியாகிய தகவல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவதாக காளையன் மூன்றாவதாக ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக ஷெரின் வெளியேறியுள்ளார்.ஆறாவதாக கஜேஷ் வெளியேறியுள்ளார்.ஏழாவதாக ஆண்ட்ரியன் வெளியேறியுள்ளார்.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற வைல்ட் கார்டு போட்டியில் வெளியே சென்ற ஆண்ட்ரியன் மீண்டும் உள்ளே வந்தார்,தற்போது இறுதி போட்டிக்கு விசித்ரா,மைம் கோபி,கிரண்,ஸ்ருஷ்டி ,சிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் தேர்வாகி உள்ளனர்,தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது,இதில் இந்த சீசனில் மைம் கோபி வெற்றிபெற்றதாக கூறப்படுகிறது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பொறுத்திருந்து யார் வெற்றிபெற்றார் என்பதை காணலாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in