பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற ஓட்டுநர் | உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே மகத்தான வெற்றி பெற்றன. கடந்த பத்து ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர் பதவிகள் காலியாகவே உள்ளன. இதனால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.குறிப்பாக பாதாள சாக்கடை, குண்டும் குழியுமான ரோடுகள், மின் விளக்கு பிரச்னை, தெருக்களில் தெரு நாய் பிரச்னை என்று மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற ஓட்டுநர் | உள்ளாட்சி தேர்தல் 1

விளம்பரம்

இந்த நிலையில் திமுக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. தேர்தல் வாக்குறுதி படி ஆட்சிக்கு வந்த உடனேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே ஊரக மற்றும் கிராம பகுதிகளில் தேர்தலை நடத்தி முடித்தார். அதில் அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டு போட சென்ற ஓட்டுநர் | உள்ளாட்சி தேர்தல் 2

விளம்பரம்

இந்த நிலையில் இன்று தருமபுரி பகுதியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில் பாலக்கோடு வழியாக சேலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் இறங்கி சென்று வாக்கு அளித்து விட்டு வந்தார். இவர் பயணிகளிடம் 10 நிமிடம் கொடுங்கள் ஒட்டு போட்டு விட்டு வருகிறேன் என்று கூறி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டுஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு வந்துள்ளார். வைரலாகி வரும் அந்த விடியோவை நீங்களும் காண.. Watch the Below Video….

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment