The Indian Times

Jail – Official Teaser – G.V. Prakash Kumar | Vasanthabalan

ஜெயில் வசந்தபாலன் எழுதி இயக்கி வரும் ஆக்‌ஷன் திரைப்படமாகும். இப்படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளுடன் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது பிரகாஷ் தனது வாழ்க்கையை வசந்தபாலனின் வெயில் (2006) திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தொடங்கினார். எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி தொடரின் மூலம் புகழ் பெற்ற அபர்னதி இந்த படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமாகிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in