The Indian Times

நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.

Advertisement

அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக செப்டம்பர் 7ஆம் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

அதனை முன்னிட்டு படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் நேற்று நடத்தியது படக்குழு.

Advertisement

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in