The Indian Times

கவினுடன் ஜோடி சேரும் குக் வித் கோமாளி நடிகை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பல நிக‌ழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனாலும் சின்னத்திரையில் ஒரு பெரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர் மக்கள். அப்படி சின்ன திரையில் அறிமுகம் ஆகி தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கி மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் தான் கவின். இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பத்தில் ஷாட் பிலிம் எடுத்து வந்தார். அதற்கு பிறகு இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கூத்து மேடைகளில் நடிப்பை மேம்படுத்தி கொண்டார்.

அதற்கு பிறகு 2013 ல் ஒளிபரப்பு ஆகிய சரவணன் மீனாட்சி 2 ல் வேட்டையன் ஆக அறிமுகம் ஆகி பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றார். அதன் பிறகு இவர் நட்புனா என்னென்னு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவே இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

Advertisement

இதன் மூலம் 2019 பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று லாஸ்லியாவுடன் காதல் மலரவே பல சர்ச்சைகளில் சிக்கினார். இருந்தாலும் அது மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படவில்லை. 12 வாரங்கள் முடிவில் 500000 பெட்டியுடன் வெளியேறினார்.

அதற்கு பிறகு இவர் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றி எந்த தகவலும் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இப்போது ஒரு அரிய தகவல் கிடைத்துள்ளது. நம்ம குக் வித் கோமாளி ஷோவுரல வர பவித்ரா லட்சுமி இவர் நடிக்கிற இந்த படத்துல ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதையடுத்து இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in