The Indian Times

இன்னும் ரஜினி நம்மளை பைத்தியக்காரன்னு நினைச்சிட்டு இருக்காரு.. லால் சலாம் BLUESATTAI மாறன் REVIEW

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

Advertisement

நேற்று வெளியாகிய இப்படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த விமர்சனத்தில், எந்த கதாபாத்திரமும் ஒழுங்காக வடிவமைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் கதாபாத்திரம் என்னவென்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் செட் ஆக வில்லை என கூறி உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in