The Indian Times

VIJAY TV தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.

Advertisement

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.

வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.

தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.

அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in