The Indian Times

படம் ரொம்ப எரிச்சலை ஏற்படுத்துது… LOVER படத்தின் BLUESATTAI மாறன் REVIEW

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் .தற்போது இயக்குனர் பிரபுராம் இயக்கத்தில் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதில், படம் ரொம்ப எரிச்சலை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளை நீளமாக வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். பாடல்கள் வலுக்கட்டாயமாக திணித்து வைத்துள்ளனர் என கூறி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

Embed Video Credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in